யாருகிட்ட.. நேரம் பார்த்து ஆப்பு வைத்த கமல்: இதோட சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரை முடிக்கணும்..!

Author: Vignesh
12 December 2023, 6:25 pm

பொதுவாக திரைத்துறையில் உள்ள நட்சத்திரங்கள் என்றாலே ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை ஏற்பட்டு கஷ்டத்தை கொடுக்கும். அப்படித்தான் தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்க்கையிலும் நடந்து வருகிறது. குறுகிய காலத்திலேயே சின்ன திரையிலிருந்து வெள்ளி திரையில் உச்ச நட்சத்திரமாக சிவகார்த்திகேயன் உயர்ந்தார்.

ஆனால், ஒவ்வொரு படமும் வெளியாகும் கட்டத்தில் பிரச்சினையை சந்தித்து வந்தார். அப்படி மூன்று பிரச்சனைகளால் சிவகார்த்திகேயன் தற்போது நிலைகுலைந்துள்ளார். அதாவது, கமலஹாசன் தயாரிப்பில் நடித்துவரும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது, கமல்ஹாசன் ஒரு பெரிய ஆப்பு வைத்துள்ளார்.

sivakarthikeyan-updatenews360

அதாவது, அப்படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட தற்போது அதிகரித்ததால் கோபத்தில் இருந்த கமல் சிவகார்த்திகேயனின் சம்பளத்தில் கை வைத்திருக்கிறார். பேசிய தொகையில், ஒரு பகுதியை அப்படியே குறைத்ததால் சிவகார்த்திகேயன் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், பல ஆண்டுகள் தூசி பட்டிருந்த அயலான் படம் பொங்கல் அன்று வெளியாக இருந்த நிலையில், தற்போது படத்தின் முக்கிய காட்சி ஒன்று லீக் ஆகி உள்ளது. இப்படம் ஓடவே கூடாது என்று சிலர் வேலை பார்த்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

sivakarthikeyan-updatenews360

கடைசியாக வெள்ள பாதிப்புக்காக சிவகார்த்திகேயன் 10 லட்சம் தொகையை உதயநிதி ஸ்டாலின் இடம் கொடுத்தார். ஆனால், இமான் மனைவி பிரச்சினையால் சிவகார்த்திகேயன் பெயர் டேமேஜ் ஆக அவர் கொடுத்த விஷயமே சைலன்டாக போய் விட்டது. இமான் மனைவி பிரச்சினையை சரி செய்ய இப்படி செய்து வீணாகிவிட்டது என்று சிவகார்த்திகேயன் மன உளைச்சலில் இருக்கிறாராம்.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 386

    0

    0