சந்திரமுகி 2 வெளியாவதற்கு முன்பே 3-ம் பாகம்?.. – சூப்பர் அப்டேட்டை கொடுத்த லாரன்ஸ்..!

Author: Vignesh
17 April 2023, 11:30 am

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி பெரும் சாதனையை படைத்தது.

chandramukhi-updatenews360

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் முன்னணி நடிகராகவும் நடன இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர். சமீபத்தில் இவர் நடிப்பில், ருத்ரன் படத்தில் நடித்து வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ருத்ரன் படத்தின் பிரமோஷனுக்காக தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து உள்ளார்.

chandramukhi-updatenews360

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தை பற்றியும் ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருக்கிறார். சந்திரமுகி 2 வாய்ப்பு எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், இயக்குனர் பி வாசு சார் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை பார்த்துவிட்டு கால் செய்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.

chandramukhi-updatenews360

அப்போது அவரிடம் சூப்பர் ஸ்டார் தானே பண்றாரு என்று கேட்டதற்கு, சார் பண்ணவில்லை வேறொருவரை தான் பண்ண வைக்கனும்-னு தெரிவித்தார் என்றும், கதை சொல்லி கன்ஃபார்ம் பண்ணியாச்சா சார் என்று வாசு சாரிடம் கேட்டதற்கு, இல்லைன்னு சொன்னதும் தன்னிடம் கதை கூறமுடியுமா என்று சும்மா கேட்டதும் உடனே வீட்டிற்கு வந்து கதையை சொன்னார்.

chandramukhi-updatenews360

அப்படி ஆரம்பித்தது தான் சந்திரமுகி 2 என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் முதல் பாகத்தில் வரும் பாம்பு காட்சிகள் 2 ம் பாகத்திலும் இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு, பாம்பு ஷாட்ல இருக்கு என்றும், ஆனால் பாம்புக்கும் ஷாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு வாசு சாரிடம் நானே கேட்டதற்கு, அது சந்திரமுகி 3 ல் இருக்குன்னு சொல்லிட்டாரு என ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

chandramukhi-updatenews360

அப்படின்னா, சந்திரமுகி 2 விற்கு பிறகு சந்திரமுகி 3 படமும் ரெடி பண்ணி இருக்காரா வாரிசு என்று பலர் ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து உள்ளார்கள். ரஜினிகாந்தின் சிஷியானான ராகவாலாரன்ஸ், சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளதற்கு, ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?