சூப்பர் ஸ்டார் கட்டி பிடித்திருக்கும் இந்த சிறுவன் யார் என்று தெரிகிறதா?.. இப்ப அவரோட சொத்து ரூ. 3000 கோடிப்பு..!
Author: Vignesh15 June 2024, 11:54 am
பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. பாலிவுட் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சிலரது சிறுவயது புகைப்படங்களை பார்த்தாலே அவரா இது என கேட்க தோன்றும் அந்த அளவுக்கு குழந்தை பருவ போட்டோவில் அடையாளம் தெரியாமல் இருப்பார்கள். அப்படித்தான் தற்போது, நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் குழந்தை பருவ போட்டோ வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக, பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரித்திக் ரோஷன் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் இணைந்து நடித்த இந்தி திரைப்படத்தில் பகவான் தாதா இப்படத்தில் முக்கிய ரோலில் ரித்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முன்னணி நடிகராக வலம் வரும் ரித்திக் ரோஷனின் சொத்து மதிப்பு மட்டும் 3 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என பாலிவுட் பத்திரிகைகள் கூறுகின்றன.