தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
திருமணத்திற்கு முன்பும் சரி அதன் பின்பும் சரி ஜோதிகாவின் படங்களில் சூர்யா தலையிட்டு நடிகர் நடிகைகள் குறித்த விவகாரம், கதை, வசனம் என அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே க்ரீன் சிக்னல் கொடுப்பாராம்.
இந்நிலையில், ஜோதிகா பிரபல நடிகையாக வளர்ந்து வந்த சமயத்தில் அவருடன் நடித்த 4 ஹீரோக்கள் ஜோதிகாவிற்கு காதல் வலை விரித்துள்ளனர். அப்படியாக இவரை காதலிப்பதற்கு வளைத்து போட நினைத்த 4 ஹீரோக்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரித்விராஜ்: 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மொழி. இதில் ஜோதிகா உடன் பிரித்விராஜ் இணைந்து நடித்திருப்பார். அப்பொழுது ஜோதிகாவின் அழகில் மயங்கி அவருக்கு கொக்கி போட நினைத்த பிரித்விராஜ்க்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
மாதவன்: நடிகர் மாதவன் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். பிரியமான தோழி மற்றும் டும் டும் டும் போன்ற படங்களில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கம் காட்டி நடித்துள்ளனர். அதிலும் காதலில் பின்னி பெடல் எடுத்து இருப்பர். இதன் காரணமாகவே மாதவன் ஜோதிகாவை காதலிப்பதாக அப்போதே கிசுகிசுக்கப்பட்டார்.
பிரசாந்த்: 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன் காந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஸ்டார். இதில் பிரசாந்திற்கு ஜோடியாக ஜோதிகா நடித்தார். இவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் ஆகவே வலம் வந்தனர். இதனால் சினிமாவில் இவர்கள் இருவரும் ரியல் ஜோடியாக மாறுவார்கள் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
சிம்பு: சிம்பு மற்றும் ஜோதிகா சரவணா, மன்மதன் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தனது படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படும் சிம்பு, ஜோதிகாவையும் விட்டு வைக்கவில்லை. ஸ்கெட்ச் போட்டு பார்த்தும் இவரின் வலையில் ஜோதிகா சிக்காமல் நழுவியுள்ளார்.
ஜோதிகா இப்படி இந்த 4 ஹீரோக்கள் விரித்த காதல் வலையில் சிக்காமல் நழுவியுள்ளார். ஆனால் சூர்யா போட்ட தூண்டிலில் ஜோதிகா சிக்கியுள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சினிமா துறையில் நட்சத்திர தம்பதிகளாகவே வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.