இறப்பதற்கு முன் மீனா பேரில் கணவர் எழுதி வச்ச சொத்து… எத்தனை கோடி தெரியுமா?

Author: Shree
7 September 2023, 3:25 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்தியாசாகர் இறப்பதற்கு முன்னர் தனது சொத்துக்கள் அனைத்தையும் மனைவி மீனாவின் பேரில் எழுதி வைத்துவிட்டாராம்.

இன்ஜினியராக பணியாற்றிய வித்தியாசாகர் மாதம் ரூ 3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்கிவந்தாராம். அவரின் மொத்த சொத்து ரூ.40 கோடி வரை இருக்குமாம். அது அத்தனையும் மனைவியின் பேரிலே எழுதி வைத்துவிட்டு இறந்தாராம். இந்த செய்தி வெளியாகி இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 457

    0

    0