பிரபல நடிகரை வளைத்து போட நினைத்த 5 நடிகைகள்: காதல் வலையில் சிக்காமல் டாட்டா காட்டிய டாப் ஸ்டார்..!

Author: Vignesh
20 January 2023, 2:30 pm

90ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய், அஜித்திற்கு சீனியராக இருந்து நடிகர் பிரசாந்த் கொடிக்கட்டி பறந்தவர். இளம் பெண்களின் ஆசை நடிகராகவும் சாக்லெட் பாயாகவும் திகழ்ந்து வந்த பிரசாந்தை, வளையில் சிக்கவைக்க பல நடிகைகள் போட்டா போட்டிப் போட்டு வந்தனர்.

prashanth - updatenews360

அதில், முதல் ஆளாக இருப்பது நடிகை மோகினி. நடிகை மோகினி உனக்கென பிறந்தேன் என்ற படத்தில் அறிமுகமானார். உனக்கென பிறந்தேன் படத்தில் பிரசாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார் நடிகை மோகினி. அப்படத்தில் கதைக்கு ஏற்றவாறு கிளாமரில் பிரசாந்தை மயக்க நினைத்தும் கைக்கு எட்டாமல் போனதாகவும், அதன்பின் மீண்டும் கண்மணி படத்தில் நடித்தும் பிரசாந்த் வலையில் சிக்கவில்லை.

mohini - updatenews360

நடிகை வினோதினி தமிழில் மணல் கயிறு, புதிய சகாப்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் பிரபலமானவர். வண்ண வண்ண பூக்கள் படத்தில் பிரசாந்த் இளமை தோற்றத்தில் இருப்பதை அறிந்து வினோதினி மிகவும் நெருக்கமாக நடித்து அசத்தியதால், அப்போது இருவர் மீதும் காதல் கிசுகிசு செய்திகள் வெளியாகியும் பிரசாந்த் துளிக்கூட அதை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டார்.

vinothini - updatenews360

90ஸ் காலக்கட்டத்தில் நடிகை மதுபாலா கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து வந்தவர். செந்தமிழ்ச்செல்வன் படத்தில் பிரசாந்துடன் நடித்த மதுபாலா, இருவரின் கெமிஸ்ட்ரி பக்காவாக அமைந்ததால், இருவரும் காதலர்களாகவே படத்தில் நடித்து ரியல் காதலர்களாக மாறுவார்கள் என்று நினைத்தநிலையில், பிரசாந்த் மதுபாலா பக்காமே அதன்பின் போகவில்லை.

madhu bala - updatenews360

தென்னிந்திய சினிமாவில் நடிகை ஹீரா முன்னனி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து அஜித், சரத்குமார் உள்ளிட்ட பலருடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர். கிருஷ்ணா படத்தில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்து நடிகை ஹீரா சில வலைகளை போட்டார். ஆனால் பிரசாந்த் அதற்கு இடம் கொடுக்காமல் வேறு பக்கம் சென்றுவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

heera - updatenews360

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக நடிகை ரம்பா தன்னுடைய தொடை அழகை காமித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்தவர். நடிகை ரம்பா 1999ல் பூமகள் ஊர்வலம் படத்தில் பிரசாந்துடன் ஜோடிப்போட்டு நடித்தார். பூமகள் ஊர்வலம் படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியும் ரம்பாவையே கண்டுக்கொள்ளாது நடிகர் பிரசாந்த் முதல் நடிகராக திகழ்ந்து வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

 rambha - updatenews360
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!