Adjustment செய்யாமல் கறார் காட்டிய ஹீரோயின்கள்.. கழுவுற மீன்ல நழுவுற மீனாக இருந்து செட்டிலான 5 நடிகைகள்..!

சினிமாவைப் பொருத்தவரை பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றியுள்ளனர். ஆனால், ஒரு சில நடிகைகள் குறித்து ஒரு தகவல் தீயாக சுற்றி வருகிறது. அதாவது, திறமையால் ஜெயித்து திருமணம் ஆகி செட்டிலான ஐந்து நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த ஐந்து நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் என வந்தாலே அவர்களை தெருமுனை வரை அடித்து துரத்தி உள்ளார்களாம்.

நதியா :

1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நதியா. இவர் தன்னுடைய முதல் படத்தில் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தவர். மேலும், நதியா கொண்டை, நதியா கம்மல் என மாடன் உடைகள் மூலம் வலம் வந்து பல முன்னணி நடிகைகளை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.

மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, பூமழை பொழிகிறது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாடு நிலவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து நதியா பிரபலமானவர்.

இவர் இவருடைய நடிப்பு திறமையால் மட்டுமே பட வாய்ப்புகளை கைப்பற்றி பின்னர் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியுள்ளார். திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்த நதியா தொடர்ந்து பல படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின் அம்மாவேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தேவயானி :

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோயின் லிஸ்டில் இருந்த தேவயானி அஜித், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் குணசத்திர வேடத்திலும், சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

மும்பையை சேர்ந்த இவர் தொட்டால் சிணுங்கி என்னும் படத்தில் கவர்ச்சி வேடத்தில் அறிமுகமாகி கவர்ச்சி தனக்கு ஒத்து வராது என அடுத்தடுத்த படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்தார்.

தேவயானி எப்போதும் அட்ஜஸ்ட்மென்ட் பட வாய்ப்புகளுக்கு எஸ் சொல்லியதே கிடையாதாம். இந்நிலையில், பல போராட்டங்களை கடந்த தேவயானி பிரபல இயக்குனரான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மோனிகா :

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக மாறிய நடிகைகளின் முக்கியமானவர் மோனிகா. இவர் ஒருபோதும் அட்ஜஸ்ட்மென்ட் என பேச்சு எடுத்தாலே உங்க படத்தில் நான் நடிக்க விரும்பவில்லை என முகத்தில் அடித்தார் போல் கூறி விடுவதை வழக்கமாக வைத்துள்ளாராம்.

இதனால், தான் பல படங்களில் வாய்ப்பை கூட இழந்துள்ளாராம். அதே நேரம் திரைப்படங்களில் கதைக்காக கவர்ச்சி காட்டவும் தயங்காதவர் மோனிகா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்லாமத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டாகி விட்டார்.

சுவலட்சுமி :

அஜித் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் சுவலட்சுமி. இவர் அஜித், விஜய் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும், இவர் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் கனவு கன்னியாக அப்போதே வளம் வந்தவர். தற்போது சுவலட்சுமி குறித்து பல சுவாரசியமான தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

அதாவது சுவலட்சுமி எந்த காரணத்திற்காகவும், தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கறாராக சொல்லி பல பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளாராம். மேலும், ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திர படங்களில் நடித்தால் கவர்ச்சியான காட்சியை அல்லது படத்தில் சில Adjustment கட்டாயம் இருக்கும் என்று இவர்களுடன் நடிக்கவும் மறுத்துள்ளாராம்.

மேலும், பல நடிகர்களுடன் கிசுகிசுக்களில் இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஹீரோக்களுடன் எந்த ஒரு காதல் சர்ச்சையிலும், சிக்காத ஒரே நடிகை சுவலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

கௌசல்யா:

அழகு புதுமையான, அமைதியான , பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் பிறந்த இவர் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தும் திருமணமே எனக்கு வேண்டாம் என கூறி நிராகரித்துவிட்டார். தற்போது இவருக்கு வயது 43 என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கௌசல்யா பார்க்க சைலன்டாக இருந்தாலும், அட்ஜஸ்ட்மென்ட் என்று யாராவது வந்து வாயை எடுத்தாலே, பத்ரகாளியாக மாறி அவர்களை விரட்டி அடிக்கவும் துணிந்தவராக இருப்பாராம். மேற்கூறிய நான்கு நடிகைகளும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டாலும், கௌசல்யா மட்டும் 40 வயதை கடந்த போதிலும், இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

9 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

9 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

11 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

11 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

12 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

12 hours ago

This website uses cookies.