இங்க பருப்பு வேகல.. ஒரே படத்தில் காணாமல் போன 5 ஹீரோயின்கள்.. ஆனாலும் அவங்கள மறக்க முடியுமா?..

Author: Vignesh
3 August 2023, 11:02 am

தமிழ் சினிமாவில் பாலிவுட்டை சேர்ந்த நடிகைகள் ஒரு படத்தில் ஆவது நடித்துவிட வேண்டும் என நினைத்து இங்கு வருவதுண்டு அதேபோல் தான் உலக அழகி பட்டம் பெற்ற நடிகைகள் கூட தமிழில் முதலில் நடித்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிடலாம் என்ற சென்டிமென்ட் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நடிப்பதை சாதனையாகவே நினைத்து செயல்பட்டு வருகிறார்கள். இதில், அதிகமாக எதிர்பார்த்து வரும் நடிகைகள் சில நேரங்களில் செட்டாகாமல் கூட ஒரு சில படங்களோடு டாட்டா காட்டிவிட்டு பாலிவுட்டுக்கு பறந்து இருக்கிறார்கள்.

கஜோல்

kajol-updatenews360

மின்சார கனவு திரைப்படத்தின் மூலமாக 1997 ஆம் ஆண்டு நடிகை கஜோல் நேரடியாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும், இந்த படத்திற்கு பின்னர் வேறு எந்த தமிழ் திரைப்படங்களையும் நடிக்கவில்லை. பல வருடங்கள் கழித்து வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இருந்தாலும், அவருக்கு முதலில் கிடைத்த வரவேற்பு இந்த இரண்டாவது இன்னிங்ஸில் கிடைக்கவில்லை என்பதை உண்மை.

இலியானா

ileana d'cruz -updatenews360

ரவி கிருஷ்ணா மற்றும் தமன்னா நடித்த கேடி படத்தில் ஹீரோயினாக நடிகை இலியானா அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். பிறகு மீண்டும் தமிழுக்கு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக தமிழில் நடித்தார். அதன் பிறகு தமிழில் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

சுஷ்மிதா சென்

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்திய பெண்மணி சுஷ்மிதா சென் இவர் நாகார்ஜுனா நடித்த ரட்சகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அதன் பிறகு இவரை இவர் தமிழில் தலை காட்டவே இல்லை.

வித்யா பாலன்

பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை வித்யா பாலன். இவர் எப்போது தமிழ் படங்களில் நடிப்பார் என தமிழ் ரசிகர்கள் கூட காத்திருந்தனர். இதனை அடுத்து நேர்க்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இவர் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்திருப்பார். அதன் பின்னர் தமிழ் படங்களில் இவர் நடிக்கவே இல்லை.

ராதிகா ஆப்தே

பிரகாஷ்ராஜ் ஹீரோவாக நடித்திருந்த தோனி திரைப்படத்தின் மூலம் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ராதிகா ஆப்தே. அதன் பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கபாலி படத்தில் நடித்திருந்தார். கபாலி படத்தில் இவர் நடித்த குமதவல்லி கேரக்டர் இவருக்கு நல்ல பெயரை கொடுத்தாலும், பெரிதான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை அதனால் இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 388

    0

    0