ஹீரோயிசம் காட்டி கலெக்டராய் கருத்து பேசிய 5 ஹீரோயின்கள் – சின்சியர் ஆபீஸரா சீறி பாய்ந்த நயன்தாரா!

Author: Vignesh
7 July 2023, 11:15 am

பெரும்பாலும் படங்களில் ஹீரோ கதாபாத்திரம் தான் பெருமளவில் பேசப்படும். இதனை தகர்த்தெறிந்து ஹீரோயின் கதாபாத்திரம் என்றாலும், அவ்வாறு இல்லாமல் நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் ஏற்று தன் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள். அவ்வாறு ஹீரோயின்களாக நடித்த இந்த ஐந்து நடிகைகளும் கலெக்டர் கேரக்டரில் அசத்தி இருப்பார்கள். அவர்களைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

சிம்ரன்:

90’s காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிச்ச ஹீரோயின் என்றால் அது நம்ம இடுப்பழகி சிம்ரன் தான். மலையாளத்தில் அறிமுகமாகி அதன்பின் தமிழில் தன் நடிப்பின் மூலம் கனவு கன்னியாக வாழும் வந்தவர் சிம்ரன். இன்று இலியானாவை எல்லோரும் இடுப்பழகி என்றுங்கூரலாம், ஆனா விதை சிம்ரன் போட்டது.

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் எண்ணற்ற படங்களில் மாபெரும் வெற்றியை கண்ட படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.

simran-updatenews360

இந்தபடத்தில், விஜய்க்கு ஜோடியாக இடம் பெற்ற இவர் இந்த படத்தில் மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். மேலும், தன்னுடைய இத்தகைய வளர்ச்சிக்கு காரணம் காதலன் தான் என்பதை அறிந்து வெளிப்படுத்தும் உணர்ச்சிகளில் பெரிதும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா:

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

nayanthara - updatenews360.jpg 2

முன்னணி கதாநாயகியாக இருந்து தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருபவர் நயன்தாரா. படங்களில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்றி நடித்த படம் தான் அறம். இந்த படத்தில் மதிவாதனி ஐஏஎஸ் அதிகாரியாக இடம் பெற்றிருந்தார். மேலும், கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக்கொண்ட தன்ஷிகா என்ற சிறுமியை காப்பாற்றும் படலத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

அபிராமி:

abirami-updatenews360

திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் ’விருமாண்டி’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார். விருமாண்டி திரைப்படம் தான் வரத்து கேரியரை நிலைநிறுத்தியது.

abirami-updatenews360

மனோஜ் குமார் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் வானவில் இதில் அர்ஜுன் அபிராமி பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் அபிராமி ஐஏஎஸ் அதிகாரியாக இடம் பெற்று இருப்பார். மேலும் தன் காதலன் அர்ஜுனும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இருந்தாலும் இந்த கதாபாத்திரம் இவருக்கு கடமையான விமர்சனத்தையே பெற்று தந்தது.

தேவயானி:

devayani-updatenews360

1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த தேவயானி எல்லா ஹீரோக்களுக்கும் பொருந்தும் பொருத்தமான அழகான, பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் தேவயானி குழந்தை போன்ற குணம் கொண்டு கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.

devayani-updatenews360

தேவயானி தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் 1997 இல் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற சூரியவம்சம் படத்தில் தனக்கேற்ற துணையை ஏற்றுக் கொள்ளும், சரத்குமார் தன் மனைவியான தேவயானியின் வளர்ச்சிக்கு துணையாய் நின்று அவரை ஐஏஎஸ் அதிகாரியை ஊக்குவிப்பார். அதிலும் குறிப்பாக ஒரே பாடலில் இவை அனைத்தும் நிறைவேறுமாறு இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

அனுஷ்கா ஷெட்டி:

நல்ல அழகு, திறமையான நடிப்பு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீயம் செய்து வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் 2018ல் அசோக் இயக்கத்தில் வெளிவந்த பாகமதி படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இடம்பெற்று இருப்பார்.

bhaagamathie-updatenews360

மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த இவர் இந்த படத்தில் அநீதியை எதிர்த்து நியாயம் கேட்கும் கதாபாத்திரத்திலும் மேலும் தன் காதலன் இறப்பிற்கு பழித்திர்க்கும் படலமாய் தன் சிறந்த நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். இதைத்தொடர்ந்து இந்த படம் வணிக ரீதியான வெற்றியை கண்டது குறிப்பிடத்தக்கது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 354

    0

    0