இதெல்லாம் ஒரு கிஸ்ஸா?.. 50 வயசு ஆச்சு.. பிரபல நடிகரை பங்கமாய் கலாய்த்த பயில்வான்..!

Author: Vignesh
24 June 2023, 2:31 pm

சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான பயில்வான் ரங்கநாதன் நடிகராக இருக்கும் போது கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகாத நிலையில், இப்போது சினிமா விமர்சகராக இருந்து கொண்டு பல முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

bommai -updatenews360

அதிலும், தற்போது ஒரு படி மேலே சென்று பிரபல ஹீரோ ஒருவரிடம் நேருக்கு நேராக இதெல்லாம் ஒரு கிஸ்ஸா என்று கேவலப்படுத்தி இருக்கிறார் பயில்வான். திரை துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமையை கொண்டிருக்கும் SJ சூர்யா ஹீரோவாக நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான பொம்மை படம் குறித்துதான் பயில்வான் ரங்கநாதன் கலாய்த்துள்ளார்.

bommai -updatenews360

ஒரு பொம்மையின் மீது காதல் கொள்ளும் கதாநாயகனின் மனநிலை அதன் பிறகு ஏற்படும் விளைவு தான் இந்த பொம்மை படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. இந்த படம் கடந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் ட்ரெய்லர் வெளியாகும் போது அதில் கதாநாயகி பிரியா பவானி சங்கருக்கு எஸ் ஜே சூர்யா கதாநாயகிக்கு லிப் டு லிப் கிஸ் அடித்த அந்த காட்சி இடம் பெற்றிருக்கும்.

bommai -updatenews360

இந்நிலையில், படம் ரிலீஸ் ஆனபோது செய்தியாளர் சந்திப்பில் பேசிய SJ சூர்யாவிடம் வயசு 50 ஆகிடுச்சு இன்னும் சிங்கிளாக இருக்கும் உங்களுக்கு முத்தம் கூட கொடுக்க தெரியாதா?.. பொம்மை படத்தில் நீங்கள் அடித்தது கிஸ்ஸா என எஸ் ஜே சூர்யாவின் மூஞ்சிக்கு நேராகவே கேட்டு அசிங்கப்படுத்தி இருக்கிறார் பயில்வான்.

bommai -updatenews360

அத்துடன் அந்த லிப் லாக் காட்சியில் இருவரும் எதற்காக வாயை மூடி கொள்கிறீர்கள் என்றும், அந்த காட்சிக்கு விளக்கமும் கேட்டு இருக்கிறார் பயில்வான். இதற்கு எஸ் ஜே சூர்யா சிரித்துக்கொண்டே அண்ணே பயில்வான் அண்ணே என்று கூறி எந்த பதிலும் சொல்லவில்லை.

bommai -updatenews360

மேலும், படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் தான் நடித்து இருப்பதாகவும், இது என்ன இங்கிலீஷ் படமா இஷ்டத்திற்கு முத்தம் கொடுக்க பொம்மை படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி ஒரு காதலின் அடையாளம் அவ்வளவுதான் என்று அதன் பின்னர் விளக்கம் அளித்தார் எஸ் ஜே சூர்யா.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 667

    1

    1