பொதுவாகவே சினிமாவை சார்ந்த சார்ந்தவர்களின் திருமண வாழ்க்கை என்பது எப்போதுமே நிரந்தரமில்லாத ஒன்று என்பதுதான் பல பேரின் கருத்தாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பல பிரபலங்கள் தங்களுடைய திருமண உறவை விவாகரத்தில் முடித்துக் கொண்டதுதான் ஒரு சில பிரபலங்கள் அதிகமான பணம் இருப்பதால் சொந்த வாழ்க்கை பற்றி யோசிக்காமல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தாங்கள் நினைத்தது போல் அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டும் வாழ செய்கிறார்கள்.
அமலா பால்
பல எதிர்ப்புகளை தாண்டி இரு வீட்டாரின் சம்மதத்தோடு இயக்குனர் விஜயை கரம் பிடித்தவர் அமலா பால். ஆனால், திருமணத்திற்கு பின் இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததை நம்பி சினிமாவில் தனது பெரிய எதிர்காலம் இருப்பதாகவும், பணம் மட்டுமே இருந்தால் போதும் எனவும், நினைத்து கிடைத்த அழகான வாழ்க்கையை தொலைத்து தூக்கி எறிந்து விட்டு தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இரு மகள்களுமே முதல் திருமணத்தில் விவாகரத்து தான் செய்திருக்கிறார்கள். இதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விருப்பப்பட்டு காதல் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் தனுஷை கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து இருக்கிறார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
சுகன்யா
90களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர்தான் சுகன்யா. இவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் செய்து கொண்டார். மீண்டும் இந்தியா திரும்பிய சுகன்யா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகள் தற்போது நடித்து வருகிறார்.
திவ்யதர்ஷினி
நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி. திவ்யதர்ஷினி சின்னத்திரை தொலைக்காட்சிகளில் மூலம் பிரபலமடைந்தவர். கேரளாவை சேர்ந்த தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினி. ஒரு வருடத்திற்குள் திருமண உறவை முறித்துக் கொண்டார். மீண்டும் சின்னத்தியில் ஒரு வலம் வரலாம் என்று நினைத்த இவருக்கு ஆர்த்தரைடீஸ் நோய் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மைனா
சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து மைனா நந்தினி பிரபலமான இவர் ஜிம் மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு சில மாதங்களிலேயே அவரை விட்டுப் பிரிந்து விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு சின்னத்திரை நடிகரான யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
மகாலட்சுமி
ஒரு தொகுப்பாளினியாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகன் இருக்கும் நிலையில், அவரை விட்டு விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய சீரியலில் நடித்த ஈஸ்வரனை காதலித்தாக செய்திகள் வெளியானது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய பின்னர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.