தனுஷ் நயன்தாரா பிரச்சனை
தற்போது கோலிவுட்டில் நயன்தாரா தனுஷ் பிரச்சனை காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நயன்தாரா–விக்னேஷ் சிவனின் ஆவணப்படம்,தாமதமாக வெளியாக தனுஷ் தான் காரணம் என மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.முன்னதாக தனுஷ் என்னுடைய அனுமதி இல்லாமல் நானும் ரவுடி தான் பட கிளிப் பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் ரசிகர்கள்,திரையுலகினர் மாத்தி மாத்தி தங்களுடைய ஆதவரை தெரிவித்து வருகின்றனர்.இந்த பிரச்சனை 9 வருடத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்து இருக்கிறது.
9 வருடத்திற்கு முன்பே வெடித்த பிரச்சனை
2016 ஆம் ஆண்டு நடந்த 63 வது பிலிம்பேர் விருது விழாவில் தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என பல திரையுலகினர் கலந்து கொண்டனர்.இதில் தமிழில் சிறந்த படத்துக்கான விருதை தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை பெற்றது.
இதையும் படியுங்க: நாகர்ஜுனா குடும்பத்தில் இணையும் விஜய் பட நடிகை…இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
இப்படத்திற்கான விருதை தனுஷ் கையில் வாங்கியவுடன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷை புகழ்ந்து பேசி படக்குழு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.ஆனால் அவர் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படமும் நாமினேஷனில் பல விருதுகளை வாங்கியது.அதைப்பற்றி தனுஷ் எதுவும் பேசாமல் இறங்கினார்.
சிறிது நேரத்தில் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா நானும் ரவுடி தான் படத்திற்காக பெற்றார்.விருதை வாங்கியவுடன் படத்தின் குழுவினர்,சக நடிகர் நடிகைகளுக்கு நன்றி சொல்லிய பிறகு தயரிப்பாளர் தனுசுக்கு மட்டும் சாரி சொல்லினார். சாரி சொல்லிவிட்டு,தனுஷ் நானும் ரவுடி தான் திரைப்படத்தை பற்றி எதுவும் பேசவில்லை ஒரு வேளை என் நடிப்பு அவருக்கு பிடிக்கவில்லை போல என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல்,இந்த விருதை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லி மேடையை விட்டு இறங்கினார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.