90களில் கொடி கட்டி பறந்த ரூபிணியா இது.. ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே..!
Author: Vignesh12 February 2024, 2:17 pm
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் கூலிக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரூபினி. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், சிறு வயதிலிருந்து இவர் குழந்தை நட்சத்திரமாகும் நடித்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ரஜினிகாந்த் நடித்த மனிதன், கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்து உள்ளார்.
அது மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை ரூபினி கடந்த 1995 ஆம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில், ரூபிணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே என அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.