ரூ. 95 லட்சத்தில் வீடு… ரஜினிக்கே தலை சுற்ற வைக்கும் பலே வேலைக்காரியின் சொத்து மதிப்பு!

Author: Shree
25 March 2023, 9:04 pm

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் என பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போனதாக ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தன் வீட்டில் வேலை பார்க்கும் மூன்று பேர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக அந்த புகாரில் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் தீவிர தேடுதல் விசாரணைக்கு பின் கணவன் மனைவி என ஐஸ்வர்யா வீட்டில் வேலைபார்த்த ஜோடி திருடர்கள் பிடிபட்டனர்.

ஈஸ்வரி என்ற வீட்டு வேலைக்காரி கணவர் வெங்கட் உடன் சேர்ந்து ஐஸ்வர்யா ரஜினி காந்தின் வீட்டில் கடந்த 4 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக நகை திருடி சென்றுள்ளார் . 7 கிலோ வெள்ளி, 60 சவரன் தங்கம், வைரம்ன் நவரத்தின மணிகள், பாரம்பர்ய நகைகள் என கிட்டத்தட்ட ரூ. 3 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி ரூ. 95 லட்சத்தில் அடுக்குமாடி கட்டி வாடகை விட்டு சம்பாதித்துள்ளார்.

அது மட்டும் அல்லாமல் தன் மூன்று மகளுக்கு நகை நட்டுகளுடன் பிரம்மாண்ட திருமணம், கணவருக்கு 4க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கிக்கொடுத்து ட்ராவல்ஸ் வைத்துள்ளார்கள். அத்துடன் இரண்டு காய்கறி மற்றும் மாளிகை கடை வைத்து கொடுத்துள்ளார். ஈஸ்வரி. ரஜினி வீட்டின் வேலை பார்த்த இந்த பலே வேலைக்காரியின் சொத்து மதிப்பு கேட்டால் தலைவருக்கே தலை சுற்றிவிடும் போல என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1246

    65

    25