கணவன்‌ – மனைவி சண்டை போட வேண்டுமா.? வருகிறது 96 -2 பாகம்.?

Author: Rajesh
1 February 2022, 6:54 pm

பள்ளிப் பருவத்தில் வரும் முதல் காதலை மீண்டும் சந்தித்தால் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் படமாக வந்தது தான் 96. விஜய்சேதுபதி, த்ரிஷா இடையே நடைபெறும் உணர்ச்சி போராட்டத்தை அழகாக காட்டியிருப்பார்கள். இந்த படம் பார்த்தவர்கள் அனைவருமே தன் பள்ளிப்பருவத்தில் செய்த அனைத்தையும் நினைவு படுத்தும் விதமாக இருந்தது என்று புகழ்ந்து, இந்த படத்தினை பாராட்டி இருப்பார்கள்.இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய வாழ்க்கையில், சினிமா ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி வருகிறது. அந்த படத்துல இருக்குற மாதிரி நீ நடந்துக்கிற, அந்த படத்த பாத்து கொலை நடந்தது. இப்படி நாம் தினந்தோறும் நடக்கும் செய்திகளை கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறோம்.

சினிமாவில் வேண்டுமானால் முன்னாள் காதலை ரசிக்க தோன்றும், ஆனால் நிஜவாழ்க்கையில், ‘நான் பள்ளியில படிக்கும் போது அந்த பையன காதலிச்சேன் என்று மனைவி, ஜாலியாக கணவனிடம் கூறினால், அதனை ஒரு பொருட்டாக எடுக்காத குடும்பத்தில் பிரச்சனை இல்லை மாறாக வேறு கோணத்தில் பார்க்கும் கணவனிடம் சொல்லும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பிக்க தொடங்கும்.. எது எப்படியோ 96-2-ஆம் பாகம் எந்த ஒரு குடும்பத்திலும் பிரச்சனைகளை உண்டாக்காமல் இருந்தால் சரி..

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu