54 வயதில் திருமணம் செய்யப் போகும் பிரபலம்.. அட அஜித், விஜய்யின் ஆஸ்தான இயக்குநராச்சே!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2023, 8:31 pm

சி னிமாவில் ஒரு துறையில் சாதிப்பதே அரிதான விஷயமாக இருக்கும் நிலையில் ஒரு சிலர் மட்டுமே நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முகத் திறைமகள் வைத்துள்ளனர்.

அந்த வகையில் வகையில் எஸ்.ஜே சூர்யா என்பவரும் ஒருவர். இவர் நடிகர் அஜித்தை வைத்து வாலி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். அடுத்தடுத்து ஹிட் படங்களால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார்.

பின்னர் இயக்குநர் பொறுப்புடன் நடிகராகவும் களமிறங்கினார். நியூ படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்த அவர், பின்னர் அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி என பல படங்களில் நாயகனாக நடித்தார்.

பின்னர் சிறிது இடைவெளிக்கு பின், நண்பன் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் 2005ல் அன்பே ஆருயிரே படத்திற்கு பின் எந்த படமும் இயக்கவில்லை. பின்னர் 2015ல் இசை படத்தை இயக்கி நடித்திருந்தார்.

பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய அவர், அட்லீ இயக்கத்தில் மெர்சல் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

பின்னர் நடிகராகவே பயணத்தை தொடர்ந்த சூர்யா, வாரிசு படத்தில் விஜய்யின் நண்பராக சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இன்னும் திருமணமே செய்து கொள்ளாத சூர்யாவுக்கு தற்போது 54 வயதாகியுள்ள நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருமணம் செய்து கொள்ளாதது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்துள்ள, சூர்யா, விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் தனது குடும்பத்தினர் திருமணம் குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 724

    5

    2