முத்தத்தால் கமல் ஹாசனை வரைந்த தீவிர ரசிகர்… வியப்பூட்டும் புகைப்படம் இதோ!

Author: Shree
30 October 2023, 7:59 pm

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார்.

அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். இப்படி கமல் ஹாசனை பற்றி பல கிசு கிசு, விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறியும் அவர் உலக திரையில் உலக நாயகனாகவும், ரசிகர்கள் மனதில் ஆண்டவராகவும் இருக்கிறார்.

தற்போது 68 வயதும் கமல் ஹாசன் இன்னும் கட்டுமஸ்தான தோற்றத்துடன் தொகுப்பாளராகவும், அரசுயல்வாதியாகவும், நடிகராகவும் சிறந்து விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் UMT ராஜா என்ற கமலின் தீவிர ரசிகர் லிப்ஸ்டிக் பூசிக்கொண்டு கமலை முத்தத்தால் வரைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்கள் முழுக்க வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதனை வரைய சுமார் 8 மணி நேரம் ஆனதாகவும் இதனை கமல் அவரின் பிறந்தநாளான நவம்பர் 7ம் அவருக்கு பரிசளிக்க உள்ளதாக அந்த ரசிகர் கூறியுள்ளார்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!