மீனாவை இரண்டாம் தரமாக பெண் கேட்டு சென்ற பிரபல நடிகர் – யார் தெரியுமா?

Author: Rajesh
5 December 2023, 12:07 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

sarathkumar-updatenews360

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் மீனா குறித்த ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. மீனா உச்ச நடிகையாக கொடிகட்டி பறந்துக்கொண்டிருந்த சமயத்தில் நடிகர் சரத்குமார் மீனா மீது காதல் வயப்பட்டு ” என்னை திருமணம் செய்துக்கொள்வீர்களா” என கேட்டாராம்.

அதற்கு மீனா, உடனே வேண்டாம் என்று நிராகரித்தால் பகையாக மாறிடுமோ என அஞ்சி என் வீட்டில் வந்து முறையாக பெண் கேளுங்கள்” என கூறினாராம். சரத்குமாரும் வீட்டிற்கு சென்று பெண் கேட்க மீனாவின் அம்மா, அவள் இப்போதுதான் சினிமாவில் வளர்ந்துக்கொண்டிருக்கிறாள். எனவே நாங்கள் திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்கக்கூட இல்லை என கூறி நிராகரித்துவிட்டாராம். அந்த சமயத்தில் சரத்குமார் ஏற்கனவே சாயா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இரண்டாம் தரமாக கேட்டதால் மீனாவின் அம்மா சூசமாக வேண்டாம் என கூறிவிட்டாராம்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!