விஜய்யின் ஆஸ்தான தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்.. அப்போ அதிரடி வசூல்தான்!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2025, 12:02 pm

நடிகர் விஜய் கடைசி படம் என தனது ஜனநாயகன் படத்தை அறிவித்துள்ளார். தொடாந்து சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் முழு நேரமும் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் மீது அக்கறை செலுத்தில 2026 தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!

இந்த நிலையில் விஜய் இல்லாததால் சினிமாவில் வெற்று இடம் தோன்றும் என பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கூறி வருகின்றனர். விஜய் இடத்தை பிடிக்க போவது யார் என்ற போட்டி இளம் நடிகர்களுக்குள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கோட் படத்தில் நடித்த போதே விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்திருப்பார். இதனால் அவர்தான் அடுத்த விஜய் என இருதரப்பு ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

SK acted Next Flip in AGS Productions

இந்த நிலையில் விஜய்யை வைத்து பிகில், கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளது. பராசக்தி, மதராஸி படத்தை முடித்த பின் எஸ்கே நடிக்கும் இந்த படத்தை ஒரு பெரிய இயக்குநர் இயக்க உள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.

  • Veeram actor Bala அஜித் பட நடிகர் மீது முதல் மனைவி பரபரப்பு புகார்.. 3வது மனைவியுடனும் சிக்கலா?
  • Leave a Reply