மெகா குடும்பத்தின் மருமகளாகிறார் பிரபல நடிகை… திருமணம் செய்து வைக்க தடல்புடல் ஏற்பாடு!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2025, 5:48 pm
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,மார்க் ஆண்டனி, நித்தம் ஒரு வானம், துருவ நட்சத்திரம் போன்ற படங்களல் நடித்தவர் நடிகை ரிது வர்மா. ஆந்திராவை பூர்விமாகொண்ட இவர், தமிழ், தெலுங்கு மொழி படங்களல் நடித்து வருகிறார்.
இவர் உப்பென்னா படத்தில் நடித்தன் மூலம் வைஷ்ணவ் தேஜ் உடன் நெருக்கமாக காணப்பட்டார். அவருடன் காதல் என பேசப்பட்டது. இருப்பினும் இருவரும் நாங்கள் நண்பர்கள் என அறிவித்தனர்.
இதையும் படியுங்க : அதிர்ச்சி.! ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகையின் நிர்வாண வீடியோ லீக்..ஆண் நண்பரின் சதியா.!
கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி ரிது வர்மா பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த விழாவில் வைஷ்ணவ் தேஜ் பங்கேற்றுள்ளார். இது பரபரப்பான செய்தியாக கிளம்பியது. இருப்பினும் ரிது வர்மாவுக்கு 35 வயதாகிறது. வைஷ்ணவ் தேஜ்க்கு 30 வயதாகிறது.

எப்படி இவர்கள் திருமணம் செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் வைஷ்ணவ் தேஜ் அண்ணனான வருண் தேஜ், நடிகை வாலண்யா திரிபாதியை திருமணம் செய்து சிரஞ்சீவியின் குடும்பத்தில் மருமகளாக இணைந்தார்.

அதே போல ரிது வர்மாவும் ஆகலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. சிரஞ்சீவியின் சகோதரி மகன் தான் வைஷ்ணவ் தேஜ். இந்த நிலையில் இருவீட்டாரும் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுளள்து. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் பல்வேறு செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
