தவெகவில் இணைந்த பிரபல நடிகை..? இது லிஸ்டுலயே இல்லயேப்பா.. வெளியான வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2024, 4:58 pm

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதிக்க உள்ளார். தனது விஜய் ரசிகர் மன்றத்தை கலைத்து விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார்.

பின்னர் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றி, முழு வீச்சில் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என கட்சி பெயரை அறிவித்தது மட்டுமல்லாமல், கொடி, சின்னம் என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும் படிக்க: கங்குவா படத்திற்குக்காக கணக்கில்லாமல் சம்பளம் வாங்கிய சூர்யா… எத்தனை கோடி தெரியுமா?

தற்போது தளபதி 69வது படத்தில் நடித்து வரும் அவர், அத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் அதற்காக மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் கட்சி முதல் மாநாட்டில் முக்கிய அரசியல் தலைவர்கள் இணையப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே பிரபல நடிகை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

TVK GOAT Actress Joined

நட்பே துணை, டிக்கிலோனா பட நடிகை அனகா தவெகவில் இணைந்துள்ளார். விஜய் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோ கடைசி உலகப் போர் பட வெளியீட்டின் போது எடுக்கப்பட்டது என்றும், அவர் வந்த கேபின் ஓட்டுநர் தவெகவை சேர்ந்தவர் என்பதால் தவெகவில் இணைந்துவிட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!