கோவிலுக்குள் செல்ல பிரபல நடிகைக்கு அனுமதி மறுப்பு.. வாசலில் நின்று சாமியை தரிசனம் செய்ததாக நடிகை வேதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2023, 9:38 pm

மதம் மாறாமல் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என நிர்வாகிகள் தெரிவித்ததால் பிரபல நடிகை கோவில் வாசலில் சாமி தரிசனம் செய்து கிளம்பினார்.

கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. பிரபல திரைப்பட நடிகை அமலா பால் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உறவினர்களுடன் சென்றுள்ளார். அவரை கோவிலுக்கு அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது.

அமலா பால் ஆலயத்துக்கு வெளியே நின்று சாமியை தரிசித்து விட்டு திரும்பியுள்ளார். தனது வருத்தத்தை கோவில் வருகை பதிவேட்டில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது. என்னால் தேவியை அருகில் சென்று தரிசிக்க முடியவில்லை. கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன். மக்களை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களாக மதிக்கும் காலம் வரும், என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமலா பால் சாமி தரிசனம் செய்ய வந்தபோது அவருடைய மதம் என்ன என கேள்வி கேட்டோம். இந்து மதத்துக்கு மாறிவீட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினோம் அவர் இல்லை என பதிலளித்தார்.

இதனையடுத்து தேவையில்லாத பிரச்னைகள் எழக்கூடாது என்பதால் அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்கவில்லை. கோவில் வாசலில் இருந்து சாமியை தரிசித்து செல்லுமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் நாங்கள் கூறியதை ஏற்றுக்கொண்டு கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார். கோவில் அலுவலகத்துக்கு வந்த அவருக்கு பிரசாதம் வழங்கி அனுப்பி வைத்தோம்” எனக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…