பிரபு மகளுடன் ரகசிய உறவில் பிரபல இயக்குனர் – அதிரடி முடிவெடுத்த சிவாஜி குடும்பம்!

Author: Shree
27 November 2023, 8:20 pm

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் பிரபல நடிகருமான பிரபு கொழுக் மொழுக் தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களே அதிகம். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார். இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் விருது பெற்றார். அப்படத்தின் போது குஷ்புவுடன் காதல் வயப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அவரது காதலுக்கு அப்பா சிவாஜி எதிர்ப்பு தெரிவிக்கவே புனிதா என்ற வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தற்ப்போது இவரது மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் என்பவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் வீட்டிற்கு தெரியவர பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் வரும் டிசம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்