சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ… அடுத்தடுத்து தோல்வியால் திடீர் முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2024, 7:30 pm

பிரபல ஹீரோ அடுத்தடுத்து கொடுத்த தோல்வி படங்களால் சிவகார்த்திகேயனுடன் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

அமரன் என்ற ஒரே ஒரு படம் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கியுள்ளது. படம் அதிரி புதிரி ஹிட் அடித்ததால் ஏர் முருகதாஸ் உடன் ஒரு படமும், சிபி சக்ரவர்த்தியுடன் ஒரு படத்திலும் சிவா கமிட் ஆகியுள்ளார்.

இதையடுத்து இயக்குநர் சுதா கொங்கரா உடன் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடாப்படாத நிலையில், சிவகார்த்திகேயன் தான் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: திருப்பூர் சுப்பிரமணியம் கூறியது சாத்தியமா? யூடியூபர்களுக்கு செக்!

இந்த நிலையில் புறநானூறு படத்தில் வில்லன் கேரக்டருக்கு ஹீரோக்களை களமிறக்க இயக்குநர் முடிவு செய்துள்ளதால் பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

முதலில் இந்த ரோலுக்கு நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடந்தது. கதையை கேட்டு ஓகே சொன்ன விஷால், சம்பளமாக ரூ.18 கோடி கேட்டுள்ளார். இதையடுத்து படக்குழு, வேறு நடிகரை நாடியது.

Vishal Palyed Negative Role against Sivakarthikeyan

தற்போது நடிகர் ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமரன் படத்துடன் ஜெயம் ரவியின் பிரதர் படம் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

Jayam RAvi Played Role Against SK

ஆனால் ஜெயம் ரவி இதுக்கு சம்மதம் தெரிவிப்பாரா? ஒரு காலத்தில் ஜெயம் ரவியை பேட்டி எடுத்தவர் சிவகார்த்திகேயன். தற்போது ஜெயம் ரவியை ஓவர் டேக் செய்து வெற்றி படங்களை குவித்து வருகிறார் சிவகார்த்திகேயன். என்ன நடக்கும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் தெரியும்.

  • Vaadivaasal Tamil movie வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!
  • Views: - 174

    0

    0