சாப்பாட்டுக்கே வழியில்லை… போதைக்கு அடிமையான கவர்ச்சி நடிகை..!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2024, 6:38 pm

சினிமாக்களில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர், நடிகைகள் நிஜ வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துள்ளனர்.

அப்படித்தான் வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. நடனத்தில் கைதேர்ந்த சாந்தி 7 வயதிலேயே சினிமாவில் பேக்டான்ஸராக அறிமுகமானார்.

அப்பா ஆனந்த் ஏற்கனவே நடிகர் என்பதால் கலைக்கு குறைச்சல் இல்லை. தொடர்ந்து டிஸ்கோ சாந்தி என அழைக்கப்பட்ட அவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஐட்டம் டான்ஸ் ஆடினார்.

1996ல் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியுடன் காதல் மலர்ந்து திருமணமும் செய்து கொண்டார். இரு மகன்களுக்கு தாயான டிஸ்கோ சாந்தி சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஆனால் கணவர் ஸ்ரீஹரி கல்லீரல் பிரச்சனையால் மரணமடைய கவலையின் உச்சிக்கே சென்ற டிஸ்கோ சாந்தி மகன்களை கூட கண்காணிக்காமல் கவலையில் மூழ்கினார்.

போதைக்கு அடிமையான அவர் கணவரின் கல்லறையிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் மகன்களில் வாழ்க்கை தான் முக்கியம் என்பதை புரிந்து கொண்ட அவர், குடிப்பழக்கத்தை விட்டு எறிந்தார்.

ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட போது, வாங்கிய நிலத்தை விற்று மகன்களின் வாழ்க்கையை கவனித்து வந்தார்.

தற்போது இரு மகன்களை மட்டும் கவனித்து வருவதாக அவரே தனது பேட்டியில் சொல்லி குமுறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 150

    0

    0