காதலித்து ஏமாற்றிய பிரபல இசையமைப்பாளர்.. 17 வருடமாக அவரோட இசையில் பாடாமல் தவிர்த்து வந்த பிரபல நடிகை!!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2022, 2:02 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பின்னணி பாடகியாக வலம் வரும் பிரபல பாடகி, பிரபல நடிகைதான் அவர்.
அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் பாடகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து பாடி பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா.
பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து தரமணி, வடசென்னை, அரண்மனை2, 3 போன்ற ஒரு சில படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தார். இவர் சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்லுறியா மாமா.. என்னும் பாடலைப் பாடி இருந்தார். இப்பாடல் எதிர்பார்க்காத அளவில் மக்கள் மத்தியில் வேற லெவலில் வெற்றியும் பெற்றது.
இடையில் ஒரு சில படங்களில் பாடியும், கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தும் இருந்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வந்த ஆண்டிரியா வடசென்னை படத்திற்கு பின் அனல் மேல் பனித்துளி, பிசாசு 2 போன்ற படங்களில் அரை நிர்வாணமாக நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆண்டிரியாவின் 17 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இது வரை அனிரூத்தின் இசையில் மட்டும் எந்த ஒரு பாடலையும் பாடவில்லை.
தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், ரஜினி, கமல் என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரும் அனிருத், ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.
சினிமாத் துறையில் நுழைந்த ஆரம்ப காலத்திலேயே நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கும் அனிருத்துக்கும் இடையே காதல் என கிசுகிசு எழுந்தது.
பின்னர் இருவரும் லிப்லாக் கொடுத்துக் கொள்ளும் போட்டோக்களும் வெளியானது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.
தான் காதலித்த பெண் தன்னை விட 6 வயது பெரியவர் என்பதால் தனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்ட அனிருத்தின் இசை வாழ்க்கையில் இருவரும் ரகசியமாக காதலில் இருப்பதாகவும், அவருடன் நெருக்கமாக முத்தமிட்ட புகைப்படங்களும் இணையத்தில் லீக்கானது.
இதை பல மேடைகளில் ஆண்ட்ரியாவும், அனிரூத்தும் கூட உண்மையை கூறி வந்தனர். இதன் காரணமாகவே அனிரூத் இசையில் ஆண்ட்ரியா பாடவில்லையாம்.