இதெல்லாம் ஒரு படமா? தனுஷை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!
Author: Udayachandran RadhaKrishnan25 February 2025, 5:08 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.
தற்போது குபேரா, இட்லி கடை என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ள தனுஷ், இடையில் இயக்குநராகவும் படம் உருவாக்கி வருகிறார்.
இதையும் படியுங்க : டென்னிஸ் வீரர் நடாலுக்கு உருவாக்கப்பட்ட வாட்ச்.. இப்போ ஹர்திக் கையில் : விலை இத்தனை கோடியா?!
தனுஷ் முதன்முறையாக இயக்கிய படம் பவர் பாண்டி. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் ஹிட் அடித்தது. இதையடுத்து அவர் இயக்கிய படம் ராயன், கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை.
மூன்றாவதாக இவர் இயக்கத்தில் வெளியானதுதான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இளம்பட்டாளங்களை வைத்து தனுஷ் உருவாக்கிய படத்தில், தனுஷின் அக்கா மகன் பவேஷ் நாயகனாக நடித்துள்ளார்.
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியுள்ளது. இந்த படத்திற்கு எதிராக களமிறங்கிய டிராகன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் ஓபன் ஸ்டேட்மெண்ட் கூறியுள்ளார். இது குறித்து ஒரு பட விழாவில் அவர் பேசும் போது, ஹீரோ பிராந்தி குடிக்கிறார், உடனே அதை பிடுங்கி ஹீரோயினும் குடிக்கிறார்.
இதெல்லாம் ஒரு கலாச்சாரமா? இதுல அதுக்கு என்மேன் என்ன கோபம், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்னு படம் பேரு வேற வெச்சிருக்காங்க. உன் மீதுதான் மக்கள் கோபமாக இருக்காங்க, இதெல்லாம் ஒரு படம் என தனுஷை சரமாரியாக விமர்சித்தார்.