திருமணதிற்கு முன்பே அப்பா ஆன பிரபல தமிழ் நடிகர்.. ஆதாரத்துடன் வெளியான தகவல்..!

Author: Rajesh
12 March 2023, 5:30 pm

70ஸ், 80ஸ்களில் தொடங்கி உலகநாயகனாக திரையுலகில் திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். என்ன தான் தற்போது அரசியல், நடிகர் என மதிக்கத்தக்க அளவிற்கு இருந்தாலும், ஆரம்ப காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கி வந்த இவரது பெயர், பல நடிகைளுடன் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், சில நடிகைகளுடன் காதல், லிவிங் டு கெதர் என ஒரு பிளேபாய் ரேஞ்சிற்கு இவரது பெயர் பேசப்பட்டது.

KAMAL HAASAN_updatenews360

இந்நிலையில், தற்போது இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அந்த காலகட்டத்தில், கமல்ஹாசன் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் பிரபல பரதநாட்டிய கலைஞரான வாணி கணபதியை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்தின் பெயரில் திருமணம் செய்துகொண்டார்.

இதே சமயத்தில் கமல்ஹாசனுக்கும் பிரபல பாலிவுட் நடிகையான சரிகாவுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். இதனை அறிந்த வாணி கணபதி, 1988ம் ஆண்டு கமல்ஹாசனிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

kamal - updatenews360

பின்னர், அதே ஆண்டில்தான் கமல்ஹாசன், சரிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் என இரு மகள்கள் பிறந்தனர். ஆனால், இதில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், கமல்ஹாசனுக்கும் சரிகாவுக்கும் 1988ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் ஸ்ருதிஹாசனோ 1986ம் ஆண்டே பிறந்துவிட்டார். அதாவது கமல்ஹாசனும் சரிகாவும் லிவிங் டு கெதரில் இருந்தபோதே ஸ்ருதிஹாசன் பிறந்திருக்கிறார்.

shruti haasan - updatenews360

அப்போது, சமூக வலைதள பக்கங்கள் பெரிதும் இல்லாத காரணத்தினால், இந்த விஷயம் பெரிய பேச்சுப்பொருளாக ஆகவில்லை. சரிகாவும் கமல்ஹாசனும் கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின்னர், கௌதமியுடன் கமல்ஹாசன் சேர்ந்து வாழ்ந்தார். தற்போது கௌதமியும் கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 381

    0

    0