தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு கதாநாயகிகளாக பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.
அந்த பட்டியலில் உள்ளவர், அதுவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களின் நடிகை கல்யாணியும் ஒருவர். இவர் இயற்பெயர் பூர்ணிதா பிறகு சினிமாவிற்காக தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.
பிரபுதேவா நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த அள்ளித்தந்த வானம் திரைப்படத்தில் ஜூலி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
நடிகை கல்யாணி இந்த படத்தினை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு குருவம்மா, ரமணா, ஜெயம் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். மேலும் சினிமாவை தொடர்ந்து விஜய் டிவி உள்ளிட்ட ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் விளங்கி வந்தார்.
இந்நிலையில் இவரால் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க முடியவில்லை இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கு பெற்ற கல்யாணி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்பது பற்றியும் கூறியுள்ளார்.
அதாவது நான் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய பொழுது பலரும் என் அம்மாவிடம் பேசினார்கள். அவருக்கு தமிழ் தெரியாது.
அவர்கள் பேசும் பொழுது ஒரு பெரிய ஹீரோ பெரிய தயாரிப்பாளர் போன்றவர்கள் படங்கள் தனக்கு வாய்ப்பு தந்து இருப்பதாக கூறியவுடன் என் அம்மா மிகவும் சந்தோஷத்தில் அந்த வாய்ப்புகளுக்கு சரி என்று கூறினார்.
ஆனால் அதன் பின்னர் தான் சினிமாவில் ஒரு சில அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று என் அம்மாவிடம் கூறினார்கள். ஆரம்பத்தில் அது ஏதாவது கால்ஷீட் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும் என்று என் அம்மா நினைத்தார்.
ஆனால் அதன் பின்னர் தான் அவர்கள் தவறாக கேட்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டார். இதன் காரணத்தினால் தான் நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று கல்யாணி பேட்டியில் கூறியிருந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் தொலைக்காட்சியில் கூட தனக்கு இதுபோன்ற தொல்லைகள் இருந்துள்ளதாக கூறியிருக்கிறார். ஒருமுறைதான் பெங்களூரில் இருந்த பொழுது அந்த இயக்குனர் கால் செய்து இரவு 8 அல்லது 9 மணி அளவில் பப்பில் சந்திக்கலாமா என்று கேட்டார். அதற்காக மறுக்கவே அதன் பின்னர் கல்யாணிக்கு மீடியாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே இவர் பெங்களூருவை சேர்ந்த ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகளும் உள்ளார்.
மேலும் அவருக்கு தற்பொழுது 4 வயதாகிறது சமீபத்தில் கல்யாணி தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.