ரீ ரிலீசுக்கு ஆதரவு… குட் பேட் அக்லியை தூக்கிவிட்டு விஜய் படத்தை போட்ட பிரபல தியேட்டர்!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2025, 4:55 pm
விஜய், ஜெனிலியா நடித்து 2005ஆம் ஆண்டு ஜான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சச்சின். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது
ஆனால் அப்போது சச்சினுடன் ரஜினியின் சந்திரமுகி படமும் வெளியானதால் இந்த படத்தை கொண்டாட மறந்துவிட்டனர். பாடலும், படமும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இந்த வருடம ரீரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்தார்.
இதையும் படியுங்க: 2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!
அதன்படி கடந்த 18ஆம் தேதி படம் வெளியானது. புதுப்படம் ரிலீஸ் ஆனது போல ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கொண்டாடினர்.
ஒவ்வொரு பாட்டுக்கு தியேட்டருக்குள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டியது. தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது.

இதனால் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தை தூக்கி விட்டு பல திரையரங்குகள் சச்சின் படத்தை ஒளிபரப்பினர்.
#SacheinReRelease housefull shows all over 🔥In LA Maris Trichy Theatre #Sachein moved from small screen to big screen and removed #GoodBadUgly 😂👌 pic.twitter.com/fIVwqevEwT
— Bala (@kuruvibala) April 21, 2025
நேரடி படத்துக்கே கிடைக்காத ஆதரவு ரீரிலீஸ் படத்துக்கு கிடைத்துள்ளது. 230 தியேட்டரில் ஒளிபரப்பாகி வருகிறது. திருச்சியில் உள்ள பிரபல திரையரங்கில் குட் பேட் அக்லியை தூக்கி விட்டு சச்சின் படம் போடப்பட்டுள்ளதாக வலைப்பேச்சு பிரபலங்கள் கூறியுள்ளனர்.
