பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்… மேடையில் அரங்கேறிய கொடுமை : வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 7:02 pm

தற்போதை சினிமாவில் படத்தை ப்ரேமோட் செய்ய பட தொடர்பான நிகழ்ச்சிகளில் நடிகர் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கம். அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளில் ஏதாவது அசம்பாவித சம்பவம் நிகழ்வதும் வழக்கமாகி விட்டது.

மலையாள சினிமாவில் நடிகையாக இருந்து தமிழில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

சமீபத்தில் சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அப்படத்திற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்று பிரபலமானார்.

இதன்பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அபர்ணா பாலமுரளி, தன்கம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் கேரளாவில் ஒரு சட்டக்கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பிரமோஷனுக்காக அந்நிகழ்ச்சி படக்குழுவினருடன் கலந்து கொண்டுள்ளார் அபர்ணா பாலமுரளி.

அப்போது திடிரென மேடையில் ஒரு மாணவர் அபர்ணாவுக்கு பூ கொடுத்ததுடன் சட்டென கையை பிடித்தும் புகைப்படம் எடுக்க அபர்ணா தோல்மீது கைபோடவும் முயற்சி செய்துள்ளார்.

சுதாரித்துக்கொண்ட அபர்ணாஅங்கிருந்து விலகி சேரில் உட்கார்ந்தார். அதன்பின்பும் மேடையில் வந்த அந்தநபர் நான் தவறாக எதுவும் நட்க்கவில்லை.

உங்களுடைய ரசிகனாக போட்டோ எடுக்க வந்தேன் என்று கூறிவிட்டு மீண்டும் கைக்கொடுக்க முயற்சி செய்துள்ளார். அபர்ணா கைக்கொடுக்காமல் பதிலடி கொடுத்து அமைதியாகினார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?