அஜித்தை ஒழிக்க நினைத்த கும்பல் – பிரபலத்தின் பேட்டியால் பரபரப்பு!

Author: Shree
3 May 2023, 6:54 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் அஜித் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக மெக்கானிக் வேலை செய்துவந்தார். அங்கேயே கார், பைக் ஓட்ட கற்றுக்கொண்டார். அப்போது பார்ப்பதற்கு அழகாக இருந்த அஜித்திற்கு மாடலிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்க நிறைய விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சில காட்சிகளில் நடிக்க திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

இதில் வரும் வருமானம் மூலம் தனக்கு விருப்பமான மெக்கானிக் தொழிலை சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று எண்ணி இதனை செய்ய ஆரம்பித்தார். பின்னர் சினிமாவே வாழ்க்கையாகிவிட்டது. அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். நடிகர் என்பதையும் தாண்டி தற்போது கூட அஜித், கார் ரேஸ், பைக் டூர் என பிசியாக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மகழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அஜித் குறித்த பிளாஷ்பேக் சம்பவம் ஒன்று செய்யற பாலு கூறியுள்ளார்.

அதாவது 1999ம் ஆண்டு கார்த்தி, மீனா நடிப்பில் வெளியான ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் அஜித் முக்கிய ரோலில் கமிட் செய்யப்பட்டார். பின்னர் திடீரென அவருக்கு பைக் ரேஸ் விபத்தில் முதுகில் 36 ஆப்ரேஷன் செய்யப்படுகிறது. அதற்காக ஆஸ்ப்பிட்டலில் அட்மிட் செய்யப்படுகிறார்.

இந்த சமயத்தில் அவரை நீக்கிவிட்டு வேறு நடிகரை போடுங்கள் என தயாரிப்பளாருக்கு திரைத்துறை கும்பல் ஒன்று கூறுகிறது. தயாரிப்பாளரும் பயந்து பிரசாந்தை ஒப்பந்தம் செய்கிறார். இதை அறிந்து ஹாஸ்பிடலில் இருந்து எழுந்து வந்த அஜித் தயாரிப்பாளரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி 5 நாட்கள் அவகாசம் கேட்டு சொன்னபடி வந்து நடித்தார். பின்னர் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என அவர் கூறினார்.

https://www.facebook.com/watch/?v=543193554554156&ref=sharing

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…