10 வருஷ தவம்…. ராம் சரண் மனைவிக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு விழா!

Author: Shree
25 April 2023, 9:37 pm

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவின் மகனான ராம் சரண் 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே நல்ல அறிமுகமாக அமைந்து 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விருதுகளை ராம் சரண் வென்றார்.

அதன் பிறகு மாவீரன் திரைப்படம் கைகொடுத்தது. கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தனர்.

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்த அந்த தம்பதிகள் ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு மனைவி உபாசனா காமினேனி கர்ப்பமாக இருப்பதாக ராம் சரண் குடும்பம் அறிவித்தது.

இந்நிலையில் அண்மையில் அவருக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 1025

    26

    3