இப்போவே கிளம்பி வா… நள்ளிரவில் பிரபலம் அனுப்பிய மெசேஜ்… screenshot போட்டு வெட்டவெளிச்சமாக்கிய சமந்தா!

Author: Shree
20 October 2023, 5:57 pm

அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமாகவில்லையாம். இதனால் நோய் தாக்கத்திலே திரைப்பங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில் சமந்தாவுக்கு ஜிம் ட்ரைனர் நள்ளிரவு நேரத்தில் அனுப்பிய வாட்ஸ்ஆப் ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சமந்தாவின் ஜிம் ட்ரைன் 11 மணிக்கு ஷார்ப்பாக ஜிம்மில் இருக்க வேண்டும் என மெசேஜ் செய்துள்ளார். அதற்கு ரிப்ளை செய்த சமந்தா எனக்கு உடல் நலம் சரியில்லை. body pain ஆக இருக்கிறது இன்று ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அப்பவும் விடாத ஜிம் ட்ரைனர் சரியாக 11 மணி ஆகி விட்டது, நான் வந்துட்டேன்… நீ எங்கே இருக்குற? என கேட்க சமந்தா செம கடுப்பாகிவிட்டார். இப்படி ஒரு நாள் கூட லீவ் கொடுக்காமல் படுத்தி எடுக்கிறார் என இந்த உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 463

    0

    0