அஜித்துடன் SJ சூர்யா.. கையில் ரத்தம் சொட்ட சொட்ட வெளியான போட்டோ..!

Author: Vignesh
15 August 2024, 5:01 pm

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட கூடியவர் அஜித். இவரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்துக் கொண்டு இருப்பதை அறிந்த எஸ் ஜே சூர்யா நேரடியாக படத்தின் செட்டிற்கு சென்று அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.

ajith-updatenews360

மேலும், அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை மிகவும் நீண்ட வருடங்களுக்கு பின் எனது வழிகாட்டி தலைசிறந்த அஜித்குமார் சாரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என கேப்சன் போட்டு பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில் எஸ் ஜே சூர்யா மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பிற்கு மத்தியில் இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் கையில் ரத்தக்கரை உள்ளது. சண்டை காட்சிக்கு மத்தியில், இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கும் போல் தெரிகின்றது. தெலுங்கு சினிமாக்களிலும் எஸ்ஜே சூர்யா நடித்து வருகின்றார். மேலும், சங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப் பிடிப்பில் கலந்து கொண்ட போது எஸ் ஜே சூர்யா அஜித்தை சந்திக்க சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக முக்கிய காரணம் அஜித்தான் என அவரே பல மேடைகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 247

    0

    0