என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
Author: Udayachandran RadhaKrishnan2 December 2024, 7:37 pm
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் முன்னணி ஹீரோவாக மாறினார். தொடர்ந்து அவர் தனது இடத்தை தக்க வைத்து தமிழ் சினிமாவில் நீங்கா புகழ் பெற்றுள்ளார்.
1979ல் மகேஷ்வரி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சிபிராஜ், திவ்யா என்ற இருபிள்ளைகள் உள்ளனர். சிபிராஜ் நடிகராகக உள்ளார்.
திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இவர் மகிழ்மதி என்ற இயக்கம் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து அளித்து வருகிறார்.
இதையும் படியுங்க: ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
இந்த நிலையில் 4 வருடமாக சத்யராஜ் மனைவி கோமாவில் உள்ளது சமீபத்தில் தான் தெரியவந்தது. இது குறித்து உருக்கமாக பேசியுள்ள திவ்யா, கடந்த சில ஆண்டுகளாக என் தாயாரின் ன் உடல்நிலை பாதிக்கப்பெற்றதால் எனது வாழ்க்கை சவாலாக மாறியுள்ளது.
வீட்டையே மருத்துவமனையாக மாற்றி, அவருக்காக ஐசியூ அமைத்து, தாயை கவனிப்பது மிகவும் கடினமான செயலாக இருந்தாலும், என் பெற்றோரைக் காக்க என்னால் இயன்றதை எல்லாம் செய்யத் தயாராக உள்ளேன்.
என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் மிகவும் வேதனையான கட்டத்தை சமாளித்து வருகிறேன். ஊட்டச்சத்து நிபுணராக எனது வளர்ச்சியோடு வாழ்க்கை முன்னேறியது என கூறியுள்ளார்.