நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா எப்போதும் இல்லாத வகையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதிலும் காவலா என்ற பாடலுக்கு மரணகுத்து ஆட்டம் போட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக அந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியே ரசிகர்களுக்கு அவுட் ஆஃப் போகஸில் தான் தெரிந்தார். அந்த அளவுக்கு தமன்னாவின் கவர்ச்சி அழகை திகட்ட திகட்ட ரசித்தனர் ரசிகர்கள்.
மேலும் படத்தின் முன் பதிவு கோடிகளில் கலெக்ஷன்ஸ் குவித்துவிட்டது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கிய. இப்படத்தில் ரஜினி ” டைகர் முத்துவேல் பாண்டியன்” என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரது மனைவியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் வில்லனாக கயல் பட நடிகர் விநாயகன் மிரட்டியிருக்கிறார். மேலும், யோகி பாபு வழக்கம் போல் காமெடியில் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்க்க வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி ஒட்டுமொத்த ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பிரபல தனியார் நிறுவனம், இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறியுள்ளதாவது,
“ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்காக விடுமுறை வேண்டும் என எங்களது HR டிபார்ட்மெண்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் வருவதைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க முடிவெடுத்துள்ளோம். மேலும், ஊழியர்களின் சிரமத்தை தடுக்கும் வகையில் பணியாளர்களுக்கு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குகிறோம்.
இது எங்கள் நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். என கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாது ஜெயிலர் படத்தின் லிரிக், “நம் தாத்தாவுக்கும், நம் அப்பாவுக்கும், நமக்கும், நம் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்’ என்று குறிப்பிட்டு ‘ரஜினிகாந்த் வாழ்க’ என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.