பதில் சொல்லுங்க மிஸ்டர்… சூர்யாவிடம் தமன்னா கேட்க விரும்பும் நறுக் கேள்வி?

Author: Shree
1 August 2023, 9:41 am

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

tamannah

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

குறிப்பாக ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட டான்ஸ் தமிழ்நாடு முழுக்க பரவலாக பேசப்பட்டது. தற்ப்போது பீக்கில் இருக்கும் நடிகைகள் லிஸ்டில் தமன்னாவும் இடம் பிடித்துவிட்டார். அதற்காகவே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அதில் தமன்னாவின் நடனம் எல்லோரையும் கவர்ந்து எக்கசக்க ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி சோஷியல் மீடியாக்களில் அனல் பறந்து வருகிறது.

ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து பல பேட்டிகள் கொடுத்து வரும் நடிகை தமன்னா நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ளார். ” எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா. தற்போது அவர் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ப்ரோமோ மிகவும் சிறப்பாக இருந்தது. அண்மையில் நான் அப்படத்தின் ஹீரோயின் திஷா பதானியை சந்தித்தபோது கூட கங்குவா படம் குறித்து கேட்டேன். மேலும் நான் , சூர்யாவிடம் தற்போது கேட்க விரும்பும் கேள்வி, ” கங்குவா படத்தின் அப்டேட் கொடுங்கள்” என்பது தான் என பேசியிருந்தார். தமன்னாவின் கேள்விக்கு சூர்யா சீக்கிரம் பதில் சொல்லுவாரா? பார்ப்போம்!

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 422

    0

    0