சென்னையில், பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.
சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.
இந்நிலையில், இந்திய இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரகுமான் தான் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் இவர் பாடலுக்கு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
இவ்வளவு வருமானம் வாங்கியும், அவர் இப்படி எளிமையாக இருப்பதற்கு காரணம் அவருடைய எளிமைக்கு காரணம் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாயிராபானு தான். ஏ.ஆர் ரகுமான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாயிராபானு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். சாயிராபானு ஒப்பனையாளராக இருந்து வருகிறார். இதனால், ஏ.ஆர்.ரகுமான் அணியும், ஒவ்வொரு ஆடையும் சாயிராபானுவின் கைவண்ணம் தான். ஏ.ஆர்.ரகுமான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பல மேடைகளில் பயன்படுத்திய உடைகள் அனைத்தும் சாயிராபானுவின் கைவண்ணம் தான்.
இதுகுறித்து, ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், தன் மனைவி எதை அணிய சொல்கிறார்களோ அதையே அணிந்து கொள்வேன் என்றும், தன் ஒப்பனையாளர் செய்யும் வேலையை தன் மனைவியே, எடுத்துக்கொண்டு அதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தான் கடந்த 15 வருடங்களாக தன் மனைவி வாங்கி தரும் ஆடைகளை தான் அணிகிறேன் என்றும், அனைத்து புகழும் தன் மனைவிக்கே அவர் பரிந்துரை செய்யும் ஆடையை தான் அணிய மாட்டேன் என்று சொன்னது கிடையாது என்று பெருமையாக தன்னுடைய மனைவி குறித்து தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.