மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
Author: Selvan4 December 2024, 9:10 pm
ஆஸ்காருக்கு நாமினேட்
தமிழ் சினிமா மட்டுமின்றி உலகமெங்கும் இருக்கக்கூடிய இசை ரசிகர்களை தன்னுடைய இசையால் மயக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான்.இவர் தன்னுடைய முதல் படமான ரோஜா திரைப்படத்திலே தேசிய விருதை வாங்கி தான் யார் என்பதை நிரூபித்தார்.
பின்பு “ஸ்லாம்டாக் மில்லியனர்” படத்திற்காக சினிமா துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கார் விருதை ஒரே படத்திற்காக 2 முறை வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
தற்போது 2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான முதற்கட்ட தேர்வில் இடம் பெற்றுள்ளார்.
ஆடு ஜீவிதம் படத்தின் இசை
பிரிதிவ் ராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளிவந்த ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் பிளஸி இயக்கத்தில் வெளியான படம் ஆடு ஜீவிதம்.
வெளிநாட்டு வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்ட ஒருவரின் உண்மையான வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைந்திருக்கும்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஆடு ஜீவிதம் படத்தின் இசையில் “இன்டிக்ஃபேர்” மற்றும் “புதுமழ” பாடல்கள், சிறந்த பாடல் பிரிவில் நாமினேட் ஆகியுள்ளன.
இதனால் ஏ.ஆர். ரஹ்மானின் மூன்றாவது ஆஸ்கார் வெற்றிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.