முதல்ல கமல்ஹாசன் இப்போ ஏ ஆர் ரஹ்மான்; மலேசிய பிரதமருடன் சந்திப்பு; சொன்ன சில் பதில்,..

Author: Sudha
11 July 2024, 3:03 pm

சில நாட்களுக்கு முன்பு ‘இந்தியன் 2’ புரமோசன் பணிகளுக்காக மலேசியா சென்ற கமல்ஹாசன், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்தார்.மரியாதை நிமித்தமாக அந்த சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் மலேசிய பிரதமரை சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக சொல்லப் படுகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 27ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.



நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட தற்போது ரஹ்மான் மலேசியா சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்த அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.

பின்னர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.அந்த பதிவில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். இந்த சந்திப்பின்போது இசை, கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் பற்றி உரையாடினோம் என்று பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர்

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!