ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமானவரா ரம்யா கிருஷ்ணன்? பெரும்புள்ளி உறவின் பின்னணி!
Author: Rajesh24 January 2024, 1:05 pm
தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.
அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது.
தற்போது பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தின் மனைவியாக ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் குறித்து அதிர்ச்சியளிக்க கூடிய ஒரு ரகசிய உண்மை கசிந்துள்ளது. ஆம், நடிகை ரம்யா கிருஷ்ணன் மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராகவும், நம்பிக்கைக்குரிய நபராகவும் இருந்த சோ ராமசாமியின் அக்கா மகள் தான் நடிகை ரம்யா கிருஷ்ணனாம்.
ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் அறிமுகம் ஆவது ஆரம்பத்தில் தாய் மாமாவான சோ அவர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். இதனால் அவர்கள் இருவரும் பல வருடங்கள் பேசாமலே இருந்து வந்தார்களாம். பின்னர் ரம்யா கிருஷ்ணன். பல்வேறு திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான நடிகையான பிறகே சோ பேசியதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஆனால், சோ தனது தாய்மாமா தான் என்பதை ரம்யா கிருஷ்ணன் எந்த ஒரு இடத்திலும் சொல்லி விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.