பிரபல பாடகியின் கணவரிடமிருந்து சமந்தாவுக்கு வந்த திடீர் மெசேஜ் : குஷியில் அவரே போட்ட பதிவு!!
Author: Udayachandran RadhaKrishnan30 December 2022, 1:03 pm
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிகப்பட்டார்.
இதனால் கடந்த பல மாதங்களாக உயிருக்கு போராடி நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன் என்று சமந்தா கூறியிருந்தார். இதற்காக கடினமான சிகிச்சையையும் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. விரைவில் தென் கொரியா சென்று சிகிச்சை பெற்று ஜனவரி மாதம் குஷி மற்றும் பாலிவுட் படத்தின் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை சமந்தா பற்றி பாடகி சின்மயின் கணவரும் நெருங்கிய நண்பருமான ராகுல் ரவீந்திரன் ஒரு பதிவினை சமந்தா குறித்து பகிர்ந்துள்ளார்.
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதற்காக நீ போராடிக்கொண்டு இருப்பாய். மேலும், மேலும் போராடிக்கொண்டே இருப்பாய். ஏன் என்றால் நீ ஒரு இரும்புப்பெண். எதனாலும் உன்னை தோற்கடிக்க முடியாது. அவை அனைத்தும் உன்னை இன்னும் சக்தி உள்ளவளாக மாற்றும் என்று பகிர்ந்துள்ளார்.
இதற்கு பதிலளித்த சமந்தா, நன்றி ராகுல், வெளியில் யாரேனும் வாழ்க்கையில் கஷ்டபட்டு போராடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவர்களுக்காக கூறுகிறேன், போராடிக்கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராகுவீர்கள் என்றும் இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்ப்பீர்கள் என்றும் கூறியுள்ளார்.
பல கஷ்டங்களை தாண்டி தற்போது தான் மீண்டும் வருகிறேன் என்று சமந்தா ஸ்ட்ராங்கான கூறிய இந்த விசயம் இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டும் சமந்தா விரைவில் குணமாக வேண்டியும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.