திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா? 

Author: Prasad
29 April 2025, 1:44 pm

டாப் நடிகை

சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தா, “சுபம்” என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். 

a temple built for samantha in andhra pradesh

இந்த நிலையில் நேற்று சமந்தா தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று சமந்தாவுக்கு ஒரு கோயிலையே கட்டியுள்ளார். 

சமந்தாவிற்கு சிலை

ஆந்திரா மாநிலத்தின் பாபட்லா மாவட்டத்தில் அமைந்துள்ள அலபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்ற நபர் சமந்தாவுக்கு ஒரு சிலையை நிறுவி ஒரு கோயிலையும் எழுப்பியுள்ளார். சமந்தா செய்யும் சமூக சேவைகள் தனக்கு பிடிக்கும் என்பதால் அவரது ரசிகராக மாறிவிட்டதாக கூறும் சந்தீப் ஒவ்வொரு ஆண்டும் சமந்தாவின் பிறந்தாநாள் அன்று ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அன்னதானம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். 

a temple built for samantha in andhra pradesh

 “பிரத்யுஷா சப்போர்ட்” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா, பல பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சுகாதார பராமரிப்புகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?
  • Leave a Reply