ரூ.1 லட்சம் கொடுத்து “லியோ” டிக்கெட் வாங்கிய விஜய் வெறியன்…. உங்க அலப்பறை தாங்கமுடியல!

Author: Shree
19 October 2023, 11:30 am

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் “லியோ” இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருக்கின்றனர்.

ரசிகர்களிடையே லியோ குறித்த எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில் சில ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சில சம்பவங்களை செய்து வருகிறார். முன்னதாக விஜய்யின் ஆர்வக்கோளாறுகள் சிலர் முதல் காட்சியை பார்த்துவிட்டு டைட்டில் கார்ட் முதல் கிளைமாக்ஸ் வரை பல முக்கிய காட்சிகளை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது ஒரு தீவிர விஜய் ரசிகர், லியோ படத்தின் டிக்கெட்டை ரூ. 1, 10,001 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார். அவர் கொடுத்துள்ள இந்த தொகை நடிகர் விஜய்யின் இலவச கல்வி பயிலகத்திற்கு கொடுக்க சொல்லி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆடியன்ஸ் அடேய் யாருடா நீ? விஜய் வெறியன்களுக்கே தலைவனா இருப்ப போல என ட்ரோல் செய்துள்ளனர். இன்னும் சிலர் அவர் கொடுத்துள்ள நோக்கத்தை பாராட்டியுள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!