வயது குறைந்த கணவரால் அந்த விஷயம் பிடிக்கல… பிரியங்கா சோப்ரா இப்படி ஓப்பனா சொல்லிட்டாங்களே!
Author: Shree15 May 2023, 11:11 am
இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். பின்னர், வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர் பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர்.
தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே பாலிவுட் சினிமாவில் பெரும் அரசியல் நிலவி வருவதாகவும் தன்னால் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக பேரதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் தன்னைவிட 10 வயது குறைந்த நபரை திருமணம் செய்ததால் தான் ஒரு விஷயத்திற்கு மிகவும் சங்கடப்பட்டதாக கூறியுள்ளார்.
அதாவது என் மாமியார் என்னிடம். நீ உலக அழகி பட்டம் வென்றபோது அந்த நிகழ்ச்சியை என் மகன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு வயது வெறும் 7 தான் என்றார். இதை கேட்டதும் தர்ம சங்கடத்திற்கு ஆளான பிரியங்கா அப்போது என் வயது 18 என கூறி சிரித்தாராம். ஒரு குழந்தையை கல்யாணம் செய்திருப்பது போல் அவர் அன்று உணர்ந்தாராம். இருந்தாலும் மற்ற விஷயங்களில் என் கணவர் எனக்கு பொருத்தமானவர் என அவர் கூறியுள்ளார்.