“ஆடுகளம்”படத்துக்கு முதலில் வெற்றிமாறன் வைத்த பெயர்…தனுஷ் எடுத்த முடிவு…!

Author: Selvan
10 December 2024, 5:49 pm

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Vetri Maaran on film titles

அதன் பின்னர் ஆடுகளம்,விசாரணை,வடசென்னை,அசுரன்,விடுதலை போன்ற பல வெற்றிகரமான படங்களை இயக்கி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

தற்போது,விடுதலை 2 படம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக உள்ளது.வெற்றிமாறன் தனது படங்களில் ஹீரோயிசம் இல்லாமல் கதையும் திரைக்கதையையும் முக்கியமாகக் கொண்டு தான் படம் இயக்குவார்.

இதையும் படியுங்க: பிரபல நடிகர் சிவராஜ்குமார் நிலைமையை பாருங்க:கேன்சருக்கு பின் வைரலாகும் புகைப்படம்..ரசிகர்கள் ஷாக்..!

அந்த வகையில் தனுஷை வைத்து வெற்றிமாறன் எடுத்த படம் ஆடுகளம்.இப்படம் மதுரை மண்ணை கதைக்களமாக கொண்டு,சேவல் சண்டையை மையப்படுத்தி அமைந்திருக்கும்.

இப்படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்,அதாவது ஆடுகளம் தலைப்பை செலக்ட் பண்ணுவதற்கு முன்னாடி படத்திற்கு சண்டைக்கோழி என பெயர் வைத்தோம்,ஆனால் அந்த டைட்டிலை வேறு ஒரு படத்திற்கு ஒதுக்கிவிட்டார்கள்.

Vetri Maaran Dhanush collaboration

பின்னர் சேவல் என்ற பெயர் யோசித்தோம்,அந்த பெயரை இயக்குனர் ஹரி அவருடைய படத்திற்கு பதிவு செய்து வைத்திருந்தார். அப்புறம் எங்களுக்குள் பேசி முடிவு செய்ததுதான் ஆடுகளம்.

அந்த டைட்டில் கொஞ்சம் படத்துக்கு ஒத்துப்போகாதது போல் எனக்கு தோன்றியது.ஆனால் தனுஷ், இதுதான் சூப்பர் டைட்டில் என்றார். அவர் டைட்டில் நன்றாக இருப்பதாக சொன்னால்,அது கண்டிப்பா சரியாக தான் இருக்கும் என ஆடுகளம் தலைப்பை,கடைசியில் படத்திற்கு வைத்தோம்.படமும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

  • Viduthalai 2 Making Video ஒரு கிராமத்தை உருவாக்கிய வெற்றிமாறன்…விடுதலை 2 மேக்கிங் வீடியோ ரிலீஸ்….!
  • Views: - 77

    0

    0

    Leave a Reply