இணையத்தை தெறிக்க விட்ட ஆஜித் – கேபி : இந்த 2k கிட்ஸ் தொல்லைய தாங்கமுடியலியேப்பா!!

Author: Vignesh
1 November 2022, 6:30 pm

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அடுத்தடுத்து சின்ன திரையில் வாய்ப்புகள் வர . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

Gabriella Charlton -updatenews360

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது சிம்பிளா மேக்-அப் போட்டு தேவலோகத்து தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

Gabriella Charlton -updatenews360

இதனிடையே, சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை அளித்த ஆஜித், இடம் கேபியை காதலிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அப்போது அவர் இல்லை அவர் எனக்கு மிகுந்த நண்பர், எனக்கு சகோதரி போன்றவர் என்று பதில் அளித்து இருந்தார். இருந்தபோதிலும் ஆஜித்தையும் கேபியையும் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தொடர்ந்து நெட்டிசன்கள் பேசி வந்தனர். தற்போது இருவரும் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 534

    0

    0