ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம்: ட்விட்டரில் வச்சு செய்த முன்னாள் காதலிகள்..!

Author: Rajesh
15 April 2022, 12:35 pm

பாலிவுட்டின் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் பிரம்மாஸ்திரா படத்தில் முதன்முதலில் ஒன்றாக நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு காதலிக்கத் தொடங்கிய இந்த ஜோடி கடந்த 2019-ம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஆனால் ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

அதன்பிறகு இந்த ஜோடியின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று இருவரும் கூறி வந்தனர். இவர்கள் திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் நேற்று மாலை ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் நடைபெற்றது.

வெள்ளை மற்றும் தங்க நிறம் கலந்த உடையில் ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜொலித்தனர். ஆலியா பட் திருமணம் முடிந்த கையோடு தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார். இதுவரை சுமார் 90 லட்சம் பேர் திருமண புகைப்படங்களை லைக் செய்துள்ளனர்.

இந்நிலையில் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலியான தீபிகா படுகோன் ஆலியா பட் வெளியிட்ட திருமண புகைப்படத்தின் கீழ் கமெண்ட் செய்துள்ளார். அதில், ‘உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் காதல், வெளிச்சம் மற்றும் சிரிப்பு இருக்க வாழ்த்துக்கள்.’ என எழுதியுள்ளார். அதோடு இதய இமோஜியையும் இணைத்துள்ளார். அதேபோன ரன்பீர் கபூருடன் டேட் செய்த நடிகை கத்ரீனாவும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோன், ரன்பீர் கபூருடன் ஏற்பட்ட காதல் முறிவுக்குப் பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அதன்பின்னர் அதிலிருந்து மீண்ட அவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்ட நிலையில், இவர்கள் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று ட்விட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமண புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1819

    0

    0