பனியன் டவுசரோடு வந்த மாப்பிள்ளை… அமீர் கான் மகளின் திருமணத்தில் அட்ராசிட்டி – வைரல் வீடியோ!

Author: Rajesh
4 January 2024, 6:08 pm

இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகரான அமீர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். வயது 58ஐ கடந்தும் அவருக்கான மவுஸ் இன்னுமும் குறைவே இல்லை. ஒவ்வொரு படத்திற்கு அதன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை உருவாக்கிக்கொண்டு நடிப்பில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அமீர் கான்.

ஆனால், இவர் கடைசியாக நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் அட்டர் பிளாப் ஆனது. மிகுந்த பொருட்செலவில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. இந்நிலையில் அமீர் கானின் மகள் ஐரா கான், ஃபிட்னஸ் டிரெய்னரான நுபுர் ஷிகாரோவை காதலித்து வந்தார்.

இவர் காதலுக்கு எதிர்ப்புகள் இன்றி பச்சைக் கொடி காண்பித்து நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தனர் பெற்றோர்கள். இதையடுத்து இந்த திருமணம் மும்பையில் 5 ஸ்டார் ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால், மாப்பிளை ஷார்ட்ஸ் மற்றும் பனியனோடு வந்து திருமணம் செய்துக்கொண்டார்.

காரணம், அவர் பிட்னஸ் ட்ரைன் என்பதால் சான்டா க்ரூஸ் பகுதியில் இருந்து திருமணம் நடக்கும் பந்த்ரா பகுதிக்கு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் ஓடியே வந்தார். மாப்பிள்ளை உடையில் வந்தால் ஓட முடியாது என்பதால் ஷார்ட்ஸ், பனியனில் ஓடிவந்து மணமகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!